Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் கோவில்களில் பிரதோஷ ... வால்பாறை கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை! வால்பாறை கோவிலில் துர்க்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா!

பதிவு செய்த நாள்

09 டிச
2015
11:12

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ஜனகவல்லி  தாயார் சமேத வைகுண்டவாசகப் பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா நடந்தது. கடந்த 6ம் தேதி காலை 11:00 மணிக்கு சிறப்பு திரு மஞ்சனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு வாஸ்துசாந்தியும், அக்னி பிரதிஷ்டையும் நடந்தது. பின் பவித்ரமாலை  அணிவிக்கப்பட்டு பூர்ணாஹூதி நடந்தது. கடந்த 7ம் தேதி காலை 6:00 மணிக்கு கோபூஜையும், மூலவர் பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலையான்  அலங்காரமும் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு   மகாசாந்தி ஹோமமும், மாலை 6:00 மணிக்கு சுதர்சனஹோமமும் நடந்தது. நேற்று காலை  11:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகாசாந்தி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12:45 மணிக்கு  மகாபூர்ணாஹூதி நடந்தது.  மதியம் 1:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்வர்ணகவசத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோவிலை வலம்  வரச்செய்து, மதியம் 1:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சாற்றுமுறையும், தீர்த்தபிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகோ பிலமட நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் பாஸ்கர், சவும்யநாராயணன், பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar