பதிவு செய்த நாள்
09
டிச
2015
12:12
கரூர்: தாசிரெட்டிப்பட்டியில், ஐயப்ப பக்தர்களின் சார்பில், தீமிதி விழா நடந்தது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த, தாசிரெட்டியபட்டியில், ஐயப்ப பக்தர்கள் சார்பில் தீமிதி விழா நடந்தது. முன்னதாக, ஐயப்ப பக்தர்கள் காப்பு கட்டுதல், கரகம் பாலிக்கப்பட்டு ஏழு சப்த கன்னிகளுக்கு நெய் விளக்கு ஏற்றி ஊர்வலமாக அழைத்தல் நடந்தது. தொடர்ந்து, குருநாதர்கள் பிச்சை, சின்னச்சாமி ஆகியோர் முன்னிலையில், ஆழிக்கு தீ மூட்டினர். நேற்று முன்தினம், 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.