பதிவு செய்த நாள்
12
டிச
2015
10:12
உடுமலை : திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், அமாவாசையையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை அருகே திருமூர்த்தி மலையில், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளைக் கொண்ட அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து,கடந்த இரண்டு வாரங்களாக, கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று அமாவாசை தினத்தையொட்டி, காலை முதலே மும்மூர்த்திகளுக்கும், சுப்ரமணிய சாமி, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டு, தீபாராதனை நடந்தது. மும்மூர்த்திகளும், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாலாற்றில் நீ ராடவும், அமாவாசையொட்டி வழிபாடு நடத்தவும் திரளான பக்தர்கள் திரண்டனர்.