ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2015 10:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் துவங்கியது. இதை முன்னிட்டு முதல் நாளான நேற்று மாலை 5 மணிக்கு பெரியாழ்வார் வழித்தோன்றல் வேதபிரான் பட்டர் அனந்தராமகிருஷ்ணன் வீட்டிற்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு சிவகாசி கட்டளைபட்டி கிராம மக்களின் சார்பில் கொண்டு வரபட்ட காய்கறிகள் பரப்பபட்டு, பச்சைபரத்தல் நிகழ்ச்சி நடந்தது. பத்ரி நாராயணன் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரட்டிபால், மணிபருப்பு நைவேத்யம் செய்யபட்டது. பின்னர் திருவோணமண்டபத்தில் எழுந்தருளி கோஷ்டி நடந்தது. செயல்அலுவலர் ராமராஜா, சுதர்சன் பட்டர், ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் கோயில் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.