பதிவு செய்த நாள்
12
டிச
2015
10:12
திருமழிசை: திருமழிசை, ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், வரும் 14ம் தேதி, லட்ச தீப திருவிழா நடைபெறுகிறது.வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் உள்ளது குளிர்ந்தநாயகி உடனாகிய ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இக்கோவிலில், இந்த ஆண்டு லட்ச தீபத் திருவிழா வரும், 14ம் தேதி, மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது.முன்னதாக, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமமும், மாலை 6:00 மணிக்கு, 108 சங்கு ஸ்தாபனம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.பின், மறுநாள் 14ம் தேதி, காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும்; 7:15 மணிக்கு மகா அபிஷேகமும்; 9:00 மணிக்கு, 108 சங்காபிஷேகமும்; மாலை 6:00 மணிக்கு லட்ச தீபமும் நடைபெறும்.