தர்மபுரி: தர்மபுரி அடுத்த, செக்கோடி மோட்டுப்பட்டி பச்சையம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா விமர்சையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், 108 பசு மாடுகளை கொண்டு கோ பூஜை நடத்தப்பட்டது. மாலை, 6 மணிக்கு கலச ஸ்தாபனம், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு பால் குட ஊர்வலம், 8.30 மணிக்கு, 108 சங்கு பூஜையும், 10 மணிக்கு பச்சையம்மனுக்கு அபிஷேகம், மண்டலாபிஷேக பூர்த்தி கலசாபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு ஸ்தபதியர் மரியாதையும், 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது.