திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருமுருகன் திருப்பேரவை சார்பில் தைப் பூச விழா துவங்கியது.கார்த்திகை முதல் தேதியன்று முருக பக்தர்கள் பலரும் கோயில் முருகன் சன்னதியில் மாலை அணிந்து தைப்பூச விரதம் துவங்கினர். நேற்று காலை 8 மணிக்கு பக்தர்கள் முருகன் சன்னதியில் கூட்டு வழிபாடு நடத்தினர்.சுவாமி வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகத்துடன் தைப்பூச விழா துவங்கியது. செவ்வாய் தோறும் மாலை 6 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். ஜன. 8ல் திருவிளக்கு பூஜை, ஜன.10ல் வெள்ளி வேலுக்கு சிறப்பு அபிஷேகம், ஜன.16ல் சுவாமிக்கு சந்தனக்காப்பு, ஜன.18ல் பாதயாத்திரை துவக்கம், ஜன.24ல் தைப்பூச அபிஷேக,ஆராதனை, பிப்.2ல் காவடி பூஜையுடன் தைப்பூச விழா நிறைவடையும்.