Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்திகாமாட்சியம்மன் கோயிலில் ... ராஜநாகலட்சுமி கோவிலில் வளைகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் கோயிலில் சனீஸ்வரர்- நீலாதேவி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2011
10:08

சின்னமனூர் : குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் திருநள்ளாறுக்கு அடுத்து பிரசித்தி பெற்றதாக, தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. ஆடித்திருவிழா ஜூலை 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சனீஸ்வரர்- நீலா தேவி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. காலையில் முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு மணக்கோலத்தில் இருந்த சனீஸ்வரருக்கும், நீலா தேவிக்கும் திருமண வைபவம் நடந்தது. கோயில் தலைமை பூசாரி திருமலை ஜெயபால் முத்து மங்கள நாணை சனீஸ்வரரிடம் வழங்கி, அம்மன் கழுத்தில் கட்டி திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பெண்களுக்கு மாங்கல்ய நாண், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட மாங்கல்ய பாக்கியம் தர சனீஸ்வரரை வேண்டி, பெண்கள் தங்கள் மாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொண்டனர். விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று பெருந் திருவிழாவான மூன்றாவது சனிவார விழா நடக்கிறது. ஜூலை 13 ல் நான்காவது சனி வாரம், 15 ல் சோணை கருப்பசாமி பொங்கல் விழாவும், 20 ல் ஐந்தாவது சனிவார விழாவும் நடக்கிறது. 21 ல் ஊர் பொங்கல் விழாவுடன் ஆடித்திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar