Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமர் கோவில் அபிஷேகத்திற்கு ... பழநியில் ஆடைக்கட்டுப்பாடு: இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாடல் ஒப்புவித்தல், கட்டுரை போட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2016
12:01

கிருஷ்ணகிரி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பாடல் ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டி கிருஷ்ணகிரியில் நாளை (2ம் தேதி) நடக்கிறது என, உதவி ஆணையர் நித்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணியசுவாமி கோவிலில், நாளை (2ம் தேதி) பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை மற்றும் பாடல் ஒப்புவித்தல் போட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. காலை, 10 மணி முதல், 11 மணி வரை கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, ஆண்டாள் அல்லது மாணிக்கவாசகர் என்ற தலைப்பிலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஆண்டாள் காட்டும் வாழ்வியல் நெறி அல்லது மாணிக்கவாசகர் வாழ்வும் வாக்கும் என்ற தலைப்பிலும், 9ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை, திருப்பாவை உணர்த்தும் பெண்கள் பெருமை அல்லது திருவெம்பாவையில் பெண்கள் விளையாட்டு என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதேபோல் பாடல் ஒப்புவித்தல் போட்டி, 2ம் தேதி காலை, 11 மணி முதல், 3 மணி வரை நடக்கிறது. இதில், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை திருப்பாவை, திருவெம்பாவை (1 முதல் 3 முடிய உள்ள பாடல்கள்), 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை திருப்பாவை, திருவெம்பாவை (4 முதல் 8 முடிய உள்ள பாடல்கள்), 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திருப்பாவை மற்றும் திருவெம்பாவை (11 முதல் 20 முடிய உள்ள பாடல்கள்) ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar