பதிவு செய்த நாள்
01
ஜன
2016
12:01
விழுப்புரம்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கான அபிஷேகத்திற்கு, விழுப்புரத்தில் சேகரிக்கப்பட்ட புனித நீருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் இருந்து புனித ஆற்று நீர் சேகரிக்கும் பணி, இந்து ஐக்கிய பேரவை சார்பில் நடக்கிறது. சேகரிக்கப்பட்ட புனிதநீரை, இந்து ஐக்கிய பேரவை நிர்வாகிகள், வரும் ஜன., 5ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு, 8ம் தேதி அயோத்தியில் நடக்கவுள்ள அபிஷேகத்தின் போது, கொண்டு சேர்க்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் சார்பில், தென்பெண்ணை ஆற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட புனித நீரை, சிந்தாமணி திரவுபதி அம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த புனித நீரை, இந்து ஐக்கிய பேரவை நிறுவனர் டாக்டர் சரவணன் தலைமையில், அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் சுபாஷ்சாமிநாதன், இந்து அதிரடிப்படை பொதுச்செயலாளர் ராஜகுரு, இந்து மக்கள் கட்சி புதுச்சேரி மாநிலத் தலைவர் மஞ்சினி, கொள்கை பரப்பு செயலாளர் பகவதி அடிகளார், இளைஞரணி பொதுச் செயலாளர் கங்காதரன், பாபு ஆகியோர் எடுத்துச் சென்றனர்.