பதிவு செய்த நாள்
18
ஜன
2016
11:01
விருத்தாசலம்: மாட்டுப் பொங்கலையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:30க்கு மேல் 10:30 மணிக்குள் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் உற்சவர் சன்னதி முன் கோ பூஜை செய்து, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.