ஆசியாவின் பெரிய விநாயகர் கோயில் உச்சிஷ்ட கணபதிக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2016 12:01
திருநெல்வேலி: நெல்லை உச்சிஷ்ட விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்ட கணபதி கோவில் அமைந்துள்ளது. ராஜகோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய விநாயகருக்கான தனிக்கோவில். இங்கு உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோகநிலையில் அருள்பாலிக்கிறார். இடதுமடியில் அம்பாளை தாங்கியிருக்கிறார். இதில் நீராடி விநாயகரை வழிபட்டால் தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளிவிநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு திருப்பணிகள் துவக்கப்பட்டன. இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் மண்டபங்கள், சுற்றுச்சுவர், கோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவுபெற்றன. 400 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புனித நீர் கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை காண ஏராளமான அளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.