பதிவு செய்த நாள்
27
ஜன
2016
12:01
ஈரோடு: ஈரோடு அடுத்த முகாசி அனுமன்பள்ளி செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது. இன்று காலை, 6 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி பூஜையும், 9 மணிக்கு தீர்த்தம் கொண்டு வருதலும், மாலை, முதல் கால யாகசாலை பூஜையும், 28 ம் தேதி காலை, 2ம் கால யாக பூஜையும் நடக்கிறது. வரும், 29ம் தேதி அதிகாலை, 4.45 மணிக்கு கோபுர விமானத்துக்கும், செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 7 மணி முதல் அன்னதானமும் நடக்கிறது.