கரபுரநாதர் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2016 12:02
வீரபாண்டி: திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு, உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், 2001ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட நீலாயதாட்சி சமேத திருநீலகண்ட நாயனார் உற்சவர் திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, நீலாயதாட்சி மற்றும் திருநீலகண்டர் உற்சவ மூர்த்திகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் எழுந்தருளச் செய்து, கோவில் உள்புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், மரத்தேரை இழுத்து வந்தனர். ஏற்பாடுகளை, திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா குழுவினர் செய்தனர்.