பதிவு செய்த நாள்
03
பிப்
2016
12:02
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம் இன்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், இன்று, காலை, 4:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 12ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. வரும், 5ம் தேதி காலை, கருடசேவையும், 9ம் தேதி காலை, 7:30 மணிக்கு, தேரோட்டமும் நடைபெறுகிறது. தினமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வீரராகவர் வீதியுலா வரவுள்ளார்.
நாள் நேரம் நிகழ்ச்சி
பிப்., 3 காலை 4:45 மணி கொடியேற்றம் காலை 7:00 மணி தங்கசப்பரம்
இரவு 7:00 மணி ஸிம்ஹ வாகனம்
பிப்., 4 காலை 7:30 மணி ஹம்ச வாகனம்
இரவு 7:00 மணி சூரிய பிரபை
பிப்., 5 காலை 5 மணி கருட சேவை (கோபுர தரிசனம்)
காலை 7:00 மணி வீதி புறப்பாடு
இரவு 8:00 மணி ஹனுமந்த வாகனம்,
பிப்., 6 காலை 7:00 மணி சேஷ வாகனம்
இரவு 7:00 மணி சந்திரபிரபை
பிப்., 7 காலை 4:00 மணி நாச்சியார் திருக்கோலம்
இரவு 7:00 மணி யாளி வாகனம்
பிப்., 8 காலை 5:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை தை அமாவாசை,
ரத்னாங்கி சேவை
மாலை 3:00 மணி சூர்ணாபிஷேகம், மாலை 4:00 மணி வேணு கோபாலன் திருக்கோலம் வெள்ளி சப்பரம்
பிப்., 9 காலை 5:00 மணி தேருக்கு எழுந்தருளல்
காலை 7:30 மணி தேர் புறப்பாடு
இரவு 10:30 மணி கோவிலுக்கு எழுந்தருளல்
பிப்., 10 மாலை 3:00 மணி திருப்பாதம்சாடி திருமஞ்சனம்
இரவு 8:30 மணி குதிரை வாகனம்
பிப்., 11 காலை 5:00 மணி ஆள்மேல் பல்லக்கு
காலை 10:30 மணி தீர்த்தவாரி
இரவு 7:30 மணி விஜயகோடி விமானம்
பிப்., 12 காலை 11:00 மணி த்வாதஸ ஆராதனம்
இரவு 8:00 மணி வெட்டி வேர் சப்பரம், இரவு 10:30 மணி த்வஜ அவரோஹணம்.