மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சிண்டிகேட் வங்கி சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பில் பத்து நகரும் நிழற்குடைகள் வழங்கப்பட்டன. இதை கோயில் இணை கமிஷனர் நடராஜனிடம் வங்கி நிர்வாக இயக்குனர் அருண்ஸ்ரீவத்சவா ஒப்படைத்தார். வங்கி மண்டல மேலாளர் மணிவண்ணன் உடனிருந்தார்.