பதிவு செய்த நாள்
15
பிப்
2016
02:02
சேலம்: ரத சப்தமியை முன்னிட்டு, சேலம் பெருமாள் கோவில்களில், சூரிய பிரபை வாகனத்தில் பெருமாளுக்கு நடந்த, சிறப்பு பூஜையில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், ரத சப்தமியை முன்னிட்டு, பெருமாளுக்கு
சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சூரிய பிரபை வாகனத்தில் திருவீதி உலாவில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சேலம், அம்மாபேட்டை சிங்கமெத்தை சவுராஷ்டிரா திருமண மண்டபத்தில், பட்ட கோவில் வரதராஜப் பெருமாள், சிங்கமெத்தை சவுந்தராஜப்பெருமாள், கிருஷ்ணன் கோவில் தெரு கிருஷ்ணன், பச்சப்பட்டி அசோக்நகர் கோவிந்தராஜப் பெருமாள், பொன்னம்மாபேட்டை கோதண்டராமருக்கு, சூரிய பிரபை வாகனத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை ருக்மணி சமேத பாண்டு ரெங்கநாதர் தேவஸ்தானத்தில், ரதசப்தமியை முன்னிட்டு, காலையில், சூரிய பிரபை, கருட, ஹனுமந்த வாகனங்களில் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சக்கரத்தாழ்வார் உள் புறப்பாடு சிறப்பு பூஜைகள் நடந்தது.