பதிவு செய்த நாள்
19
ஆக
2011
12:08
பண்ருட்டி:பண்ருட்டி சோமேஸ்வரன் கோவில் தெருவில் உள்ள காமன், கண்ணன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.பண்ருட்டி சோமேஸ்வரன் கோவில் தெருவில் உள்ள காமன் கோவில், பொன்னுசாமி தெருவில் உள்ள கண்ணன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் காலை 9 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், சுத்த ஹோமம், நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணியளவில் வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், முதல்கால பூஜை, இரவு 108 மூலிகை பொருட்கள் பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 5.45க்கு 2ம் கால பூஜை, விநாயகர் பூஜை, நாடி சந்தானம், கிருஷ்ண மூலமந்திர ஜபஹோமம் நடந்தது. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பட்டு 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு மகா அபிஷேகம், இரவு உற்சவர் விநாயகர், கண்ணன் சுவாமிகள் வீதியுலா நடந்தது.