பதிவு செய்த நாள்
23
பிப்
2016
12:02
வால்பாறை : வால்பாறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில், ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் அன்னை காமாட்சியம்மன் கோவிலின், 48ம் ஆண்டு திருவிழா கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் பிப்.,22 காலை, 11:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலிருந்து மங்களாபரணம் கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நடந்த அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பிப்.,2. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் உட்பட பலர் செய்து வருகின்றனர்.