பதிவு செய்த நாள்
24
பிப்
2016
12:02
தங்கவயல்: தங்கவயல் அருகிலுள்ள உலகமதி மலையில், புனித பெரிய வெள்ளியை முன்னிட்டு, மலை பிரசங்கம் செய்யும் நிகழ்ச்சிக்காக, மலைப்பாதை சீரமைக்கும் பணியை, பி.இ.எம்.எல்., கிறிஸ்தவ பொது நல அமைப்பு செய்தது. கடந்த, 50 ஆண்டுகளாக, தங்கவயல் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தினர், தவக்கால பெரிய வெள்ளி பிரார்த்தனை நிகழ்ச்சியை, தங்கவயல் அருகிலுள்ள உலகமதி மலையில் நடத்தி வருகின்றனர். இந்த மலைப்பகுதி முட்கள் நிறைந்த கரடுமுரடான பாதையாக இருப்பதால், பக்தர்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. இதை, பி.இ.எம்.எல்., கிறிஸ்தவ பொதுநல சங்கத்தினர், பெமல் நிர்வாகத்தின் கனரக இயந்திரத்தை பெற்று, சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். சங்க தலைவர் எஸ்.ஜெயராஜ், செயலர் ராஜேந்திரபாபு, தங்கத்தாய் ஆலய பங்கு தந்தை சகாய ஆரோக்கியதாஸ் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.