மலையாள முனியப்ப சுவாமி கோவிலில் மார்ச் 8ல் களரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2016 11:02
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே காரடர்ந்தகுடி மலையாள முனியப்ப சுவாமி கோயில் மாசி களரி விழா மார்ச் 1ல் காப்பு கட்டுடன் துவங்குகிறது. இதைமுன்னிட்டு மார்ச் 8 இரவு 7 மணிக்கு வீட்டு சுவாமி வழிபாடு, இரவு 8.30 மணிக்கு கோயில் வீட்டில் இருந்து பூஜை பெட்டி, பால்குடத்துடன் கோயிலுக்கு செல்வர். அபிஷேக ஆராதனைக்கு பிறகு களரி விழா நடக்கிறது. நள்ளிரவு ஒரு மணிக்கு சுவாமி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மார்ச் 9 காலை 9 மணிக்கு களரி நிறைவு பூஜைகளுடன் விழா முடிவடைகிறது.