வால்பாறை: வால்பாறையில், ஐயப்ப சுவாமிக்கு உத்திரபூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐயப்பசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இங்கு, பிப்.,26 முன்தினம் காலை, 5:00 மணிக்கு கணபதி பூஜையும், 5:30 மணிக்கு அபிேஷக பூஜையும், 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், காலை, 7:00 மணிக்கு ஐயப்பசுவாமிக்கு உத்திரபூஜை நடந்தன. இதில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.