வீராம்பட்டினம் கோவில் தேரோட்டம்: கவர்னர் ,முதல்வர் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2011 11:08
புதுச்சேரி:புதுச்சேரி, வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று காலை நடந்தது. கவர்னர் இக்பால்சிங் தேர்வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் கல்யாணசுந்தரம், ராஜவேலு, பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.விழாவையொட்டி ரூரல் எஸ்.பி.,தெய்வசிகாமணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செங்கழுநீரம்மன் தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் செய்திருந்தனர்.