சரநாராயண பெருமாள் கோவிலுக்கு வர்ணம் பூசும் பணி நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2016 12:03
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலுக்கு ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் வர்ணம் பூசும் பணி முடிந்துள்ளது. பண்ருட்டி அடுத்த திருவதிகை ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 18 ம்தேதி நடக்கிறது. அதனையொட்டி கோவில் முன்பு நுாதன ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் 50 லட்சம் ரூபாய் மற்றும் உபயதாரர் செலவில் கட்டும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கி முடிவடைந்து தற்போது வர்ணம் பூசும் பணிகளும் முடிந்துள்ளது. இந்த ராஜகோபும், 64 அடி உயரத்தில், ஐந்து நிலைகள் கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் கோபுரத்தின் மேல் 7 புனித கலசங்கள் பொருத்தப்பட உள்ளன.