பதிவு செய்த நாள்
11
மார்
2016
11:03
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (மார்ச், 11) நடக்கிறது. சேந்தமங்கலம் அடுத்த, மேற்கு சின்னகுளம் தெருவில் அமைந்துள்ள, கணபதி, மாரியம்மன் மற்றும் விநாயகர், முருகன், நவக்கிரகம், மதுரைவீரன், கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு, கண்திறப்பு மற்றும் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. நேற்று காலை, 10 மணிக்கு, காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தியும் நடந்தது. இன்று காலை, 9 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.