பதிவு செய்த நாள்
19
மார்
2016
02:03
கரூர்: கோதண்டராம சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. கரூர்,
கோயம்பள்ளியில் உள்ள, கோதண்டராம சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் விழாவில், நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், ஸ்ரீ சுதர்சண ஹோமம், பூர்ணாகுதி பிரசாதம் வழங்குதல், பகவத் பிரார்த்தனை, எஜமான சங்கல்பம், புண்யாகவாசனம், மிருச்சங்கிரகணம்,வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு புண்யாகம் விஸ்வரூபம், காலசந்தி திருவாராதனம், பிரதான ஹோமம், உக்த
ஹோமம், சூக்தாதி ஹோமங்கள், மஹா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடந்தது. காலை, 8.45
மணிக்கு விமான கலசங்களுக்கு, மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.