குயவன்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2016 12:03
குயவன்குடி: குயவன்குடி ஸ்ரீகுமரகுருபர சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி பாலாபிஷேக விழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று மாலை 6 முதல் 7 மணிக்குள் பூவளர்க்கும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு முழுவதும் காவடி ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.அதிகாலை 3 மணிக்கு காவடியுடன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.