சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் வெள்ளி தேருக்கு கண்ணாடி கூண்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2016 12:03
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் வெள்ளி தேருக்கு கண்ணாடி கூண்டு உருவாக்கும் பணி நிறைவடைந் துள்ளது. இக்கோயிலுக்கு சிவகங்கை தேவஸ்தானம்,பக்தர்கள் நன் கொடை யால் ரூ 1 கோடி செலவில் கலை நயமிக்க வெள்ளி தேர் கடந்தாண்டு செய்து கோயிலுக்கு அர்ப்பணிக்கப் பட்டது.கோயில் வளாகத்தில் தேர் நிறுத்தபட்டுள்ளது. பக்தர்கள் தேரை பார்க்கும் ஆர்வத்தில் திரையை நீக்கி பார்த்து வந்தனர்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் எல்லாநேரமும், தேரை பார்த்து ரசிக்க, சிங்கம்புணரியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரூ 1 லட்சம் செலவில் கோயில் உள் வளாகத்தில் கண்ணாடி கூண்டு நிறுவியுள்ளனர்.விரைவில் வெள்ளித்தேர் கூண்டுக்குள் நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க விருக்கிறது.