காரியாபட்டி:காரியாபட்டி அல்லாளப்பேரியில் மாணிக்கவாசகர் அய்யனார் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட விமான கோபுரங்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது.