பதிவு செய்த நாள்
26
மார்
2016
12:03
அனுப்பர்பாளையம்: திருப்பூர், மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, 30ல் நடக்கிறது.விழாவையொட்டி, இன்று மாலை, 4:00 மணிக்கு, வெங்டேசபுரம் செல்வ விநாயகர், பகவதி அம்மன் கோவிலில் இருந்து, பூவோடு கொண்டு வருதல்; இரவு, 8:00க்கு பூக்கம்பு நடுதல்; 28ம் தேதி, 7:00 மணிக்கு, அம்மனுக்கு பட்டு மற்றும் படைக்கலம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.வரும், 29 காலை, 6:00க்கு பூவோடு எடுத்தல்; பகல், 12:00க்கு அன்னதானம்; மாலை, 5:00க்கு மாவிளக்கு எடுத்தல் மற்றும் அம்மன் திருத்தேர் வீதி உலா நடை பெறுகிறது. வரும், 30 காலை, 6:00க்கு பொங்கல் வைத்தல்; பகல், 12:00க்கு உச்சிகால பூஜை; இரவு, 8:00க்கு, கம்பம் கலைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.இக்கோவிலுக்கு, முத்து கல்வி அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், தேர் வழங்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடு களை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.