பதிவு செய்த நாள்
28
மார்
2016
12:03
கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், புலியூர் அருகே கோவில்பாளையம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று முன்தினம், பெண்கள் அமராவதி ஆற்றில் நீராடல், அதன்பின், பெண்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றுதல், பூச்சொரிதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நேற்று காலை பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம், முளைப்பாரி ஆகியவற்றை கோவிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். நேற்றிரவு அம்மனுக்கு எதிர்காப்பு கட்டப்பட்டு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இன்று, (28-ந் தேதி) அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்தி வந்து தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகின்றனர். நாளை, (29-ந் தேதி) கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். தொடர்ந்து அம்மன் மின் அலங்காரத்தில் ரதத்தில் ஊர்வலம், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மஞ்சள் நீராட்டுடன் கம்பம் அமராவதி ஆற்றில் விடப்பட்டு மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.