பதிவு செய்த நாள்
28
மார்
2016
12:03
சேலம்: சேலம், அஸ்தம்பட்டி இமானுவேல் ஆலயத்தில், தவக்கால நிறைவு நாள், கூடாரதிருவிழாவை கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடினர். கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடந்த, 40 நாட்கள் அனுசரித்து வந்தனர். அதன் நிறைவுநாள் நேற்று இயேசு உயிர்தெழுந்த நாளை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். அஸ்தம்பட்டி,இமானுவேல் ஆலயத்தில் நேற்று காலை, 4 முதல், 10 மணி வரை சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலையில் சமூகநலகூட வளாகத்தில் நடந்த, கூடாரதிருவிழாவில் கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பாக கலந்து கொண்டனர். இரவு, 9 மணிவரை பல்வேறு கலை நிகழ்சிகள் நடந்தது. சிறப்பு திருப்பலியை கோவை மண்டல செயலாளர் பிரின்ஸ், ஆலய தலைமை போதகர் அகிலன் நடத்தினர். விழா ஏற்பாடுகளை ஆலய கமிட்டியினர் சேகர், ஜான்ராஜன், ஜான்ஞானவேல், மேத்யூதன்ராஜ், ஜான்பால் ஆகியோர் செய்திருந்தனர். விழா நிறைவில், அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.