பத்ரகாளியம்மன் கோவில் விழா: இன்று மாலை விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2016 12:04
பவானி: பவானி தேவபுரம் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் விழா கடந்த, 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை கூடுதுறை சென்று புனித நீர் எடுத்து வரப்பட்டது. மதியம் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனையும், இரவு, 9 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு கம்பம் பிடுங்குதலும், மாலை, 6 மணிக்கு மஞ்சள் நீராட்டும், நடந்து, அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை, 6 மணிக்கு, 108 விளக்குபூஜை நடைபெறுகிறது. வரும், 3ம் தேதியில் நடைபெறும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.