லாலாபேட்டை: திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரகாளியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பங்குனித்திருவிழா முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். இதை முன்னிட்டு கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூச்சொரிதல் விழாவுக்கு, தலையில் பூந்தட்டுக்களை ஏந்தி கள்ளப்பள்ளியிலிருந்து பச்சநாச்சியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்தனர். பின்னர் லாலாபேட்டை பகுதியில் அமைந்துள்ள காவிரியாற்றில் பூந்தட்டுக்களுடன் இறங்கி நடந்தே சென்று அக்கறையில் உள்ள தொட்டியம் மதுரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றனர். பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. லாலாபேட்டை பகுதி மக்கள் கொண்டு சென்ற பலவிதமான பூக்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.