எச்செயலைத் தொடங்கினாலும் முதல் வணக்கம் விநாயகப் பெருமானுக்கே. எழுதும் போது பிள்ளையார் சுழியிட்டுத் தொடங்குவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின் போது விநாயகர் கோயிலில் இருந்தே மாப்பிள்ளை அழைப்பு, சீர்வரிசை கிளம்புவது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். விநாயகரை வணங்காவிட்டால் தடைகள் உண்டாகும் என்பதை திரிபுரம் எரித்த சிவபெருமானின் வரலாறு நமக்கு காட்டுகிறது. தேவர்கள் விநாயகரை வணங்க மறந்ததால் சிவன் புறப்பட்ட தேரின் அச்சு முறிந்தது. இந்நிகழ்ச்சிக்குப்பின், விநாயகரை வழிபடாமல் எச்செயலையும் தொடங்குவதில்லை என்ற வழக்கம் உண்டானது. இதனை, பிள்ளையார் சுழி போட்டாச்சு, பிள்ளையார் குட்டியாச்சு என்று சொல்வதுண்டு.