பதிவு செய்த நாள்
16
ஏப்
2016
12:04
சேலம்: சேலம் மாவட்டத்தில், ராமநவமியை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சேலம், கோட்டை அழகிரி நாதர் சுவாமி கோவிலில், சித்திரை, 2ம் தேதியான நேற்று, ராமநவமி துவங்கியது. வரும், 25ம் தேதி வரை, இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. நேற்று, எம்பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டு, அபி?ஷக ஆராதனை நடந்தது. பின், கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை, வெண்ணை சாத்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதேபோல், தாரமங்கலம் வரதராஜ பெருமாள், ஜலகண்டாபுரம் சஞ்சீவிராய பெருமாள், சோரகை வேட்டராய பெருமாள், சென்றாயப் பெருமாள் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. சாய்பாபா ஜெயந்தி விழா: சாய்பாபா ஜெயந்தி விழாவை ஒட்டி, சேலம் கோரிமேடு சாய்பாபா கோவில் மற்றும் முல்லை நகர், ஜாகீர் அம்மாபாளையம் சாய்பாபா கோவில்களில், நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன.