கரூர்: கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை விழாவை முன்னிட்டு, ஏப்., 13ம்தேதி, கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து உற்சவம், அங்குரார்ப்பணம், பல்லாக்கு, வாகன உற்சவம் நடந்தது. நேற்று மாலை ரங்கநாதன சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கரூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று எட்டாம் திருநாள் பல்லாக்கு, இரவு சிம்ம வாகன உற்சவமும், நாளை காலை, 8.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது.