கீழக்கரை: கீழக்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த திருக்கோயில்களில் ஒன்று கீழக்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு மூலவர்கள் சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், ருத்ர ஜெப வேள்விகள் நடந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், மஞ்சள் தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பள்ளியறை பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை ஏர்வாடி, கீழக்கரை பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.