பதிவு செய்த நாள்
22
ஏப்
2016
12:04
திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்துார், காளஹஸ்தியில், காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், சோமஸ்கந்தமூர்த்தி, ஞானபிரசுணாம்பிகை, பரிவார தேவதைகளின் சன்னிதிகள் அருகில் உள்ள உண்டியல்கள் நிரம்பின. இவை, நேற்று காலை, திறக்கப்பட்டு, கோவில் செயல் அதிகாரி பிரம்மராம்பா முன்னிலையில், ஊழியர்கள் கணக்கிட்டனர். அதில், 67.24 லட்சம் ரூபாய் பணம், சில தங்க நகைகள், 206 கிலோ வெள்ளி, 52 வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன. இது, 20 நாட்களில் கிடைத்த வருவாய் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.