விழுப்புரம்: விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் அமைந்துள்ள, ராஜகணபதி கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (25ம் தேதி) காலை 9:45 முதல் 10:00 மணிக்குள் நடக்கிறது. இதனை முன்னிட்டு, இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜைகள், 8:00 மணிக்கு நாடி சந்தனம், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, 9:30 மணிக்கு கும்பமூர்த்தி புறப்பாடும், இதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மார்க்கெட் கமிட்டி வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் செய்து வருகின்றனர்.