ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2016 11:04
தேவகோட்டை: ராம்நகர் அழகப்பர் பூங்கா ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நடந்தது. தினமும் கோயிலில் வளாகத்தில் முனீஸ்வரர், விநாயகர்,முருகன், அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தன. நிறைவுநாள் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர். மாலையில் ராஜலட்சுமி பரதநாட்டியம், முன்னாள் துணை பிடிஓ தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.