பதிவு செய்த நாள்
27
ஏப்
2016
11:04
க.பரமத்தி: புன்னம் பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். க.பரமத்தி அடுத்த, புன்னம் பகுதியில் பெரிய மாரியம்மன் கோவிலில், கடந்த 10ம் தேதி, கம்பம் நடுதலுடன் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் பல்லக்கு, காமதேனு, பூ பல்லாக்கு ஆகிய வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தது. கடந்த, 24ம் தேதி, பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு, அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு வடிசோறு பூஜை, மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை அக்னிசட்டி, அழகு குத்துதலுடன் ஆற்றங்கரையில் இருந்து புனித நீர் தீர்த்தம் ஆண்கள் பெண்கள் குந்தைகள் உள்பட ஏராளமான பலர் கொண்டு வந்து சிறப்பு பூஜை நடந்தது. நேற்று பகல், 11 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், புன்னம், பசுபதிபாளையம், சடையம்பாளையம், குளத்தூர், அய்யனூர், பழமாபுரம், ஆலாம்பாளையம், வள்ளிபுரம் உள்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.