சிங்கம்புணரி: சிங்கம்புணரி சீரணி அரங்கு ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நடந்தது. இக்கோயில் திருப்பணி செய்து, கடந்த மார்ச் 18 ல் கும்பாபிஷேகம் நடந்தது.அதைத் தொடர்ந்து 48 நாட்கள் உபயதார்கள் சார்பில் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது.நிறைவாக,உமாபதி சிவாச்சாரியார் தலைமையில்.மூலவர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை,கன்னி மூல கணபதி,மஞ்சமாதா,நாகராஜா,பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.திருப்பணிக் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.