பதிவு செய்த நாள்
07
மே
2016
12:05
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையராக எஸ்.ஹரிப்பிரியா பொறுப்பேற்றுக் கொண்டார். திருவண்ணாமலை கோவிலில், இணை ஆணையராக பணிபுரிந்தவர் இரா.செந்தில்வேலவன். மகாளய அமாவாசையையொட்டி, அங்குள்ள அய்யங்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது, நான்கு பக்தர்கள் குளத்தில் மூழ்கி இறந்தனர்.இதையடுத்து, இணை ஆணையர் பொறுப்பில் இருந்து இரா.செந்தில்வேலவன் விடுவிக்கப்பட்டார். திருவண்ணாமலை, விழுப்புரம் உட்பட, மூன்று மாவட்டங்களின் இணை ஆணையரான பி.வாசுநாதன், கூடுதல் பொறுப்பு இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், திருவண்ணாமலை கோவிலின் இணை ஆணையராக எஸ்.ஹரிப்பிரியா நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்று கொண்டார். சென்னை யில் இணை ஆணையராக இருந்தபோது, ஹரிப்பிரியா தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. தற்போது, திருவண்ணாமலை கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.