புதுச்சேரி: ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. செயின்ட் தெரேஸ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீஅரங்க ராமானுஜ பஜனை கூடத்தில் வரும் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை திருவாதிரை திருநட்சத்திரத்தில் ஸ்ரீராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திர வைபவத்தை முன்னிட்டு காலை 7 மணிக்கு ‘ப்ரபந்த சேவை யும், 9 மணிக்கு சாற்றுமறை கோஷ்டியும் நடக்கிறது. பின்னர் திருவாதிரை கமிட்டி தலைவர் தேவநாதன் தலைமையில் தமிழ்மறை தழைக்க வந்த ‘ஸ்ரீ ராமானுஜர்’ நு?ல் வெளியிடப்படுகிறது. திருவாதிரை கமிட்டி உப தலைவர் ராமமூர்த்தி பெற்று கொள்கிறார். காலை 10.30 மணிக்கு மதுராந்தகம் ரகுவீரப்பட்டாச்சாரியார் உபன்யாசம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருவாதிரை கமிட்டி ஸ்ரீராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.