பதிவு செய்த நாள்
09
மே
2016
12:05
கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரம் குறிஞ்சியாண்டவர் கோயில் அருகே உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த மே 5 ந்தேதி மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயிலில் இருந்து முக்கிய தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. தினமும் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், தீபாராதனை, சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, மஹா பூர்ணாஹூதி, ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தன. சித்தி விநாயகர் கோயிலில் புதிதாக ராஜகோபுரம், மூலஸ்தான விமானம், அனுக்ஞை விநாயகர், முருகப்பெருமான், தெட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கையம்மன், நாகம்மாள், நவகிரஹ மூர்த்திகள் சகிதம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிமுதல் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தின் போது ஆலயத்தின் மீது கருடன் பறந்ததை நல்ல சகுனமாக கருதி பக்தர்கள் வணங்கினர். பக்தர்களுக்கு தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கப்பட்டது. ஆலய கமிட்டி தலைவர் சிவக்குமார், செயலாளர் ராஜேஸ்கண்ணா, பொருளாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.