நகரி: அய்யப்பன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, சத்திரவாடா கிராமத்தில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள் மற்றும் கலசங்கள் வைத்து கணபதி உட்பட நான்கு கால பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதிய விமானத்தின் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை ஏர்பேடு சுகபிரம்மா ஆசிரம சுவாமி வித்யானந்த பிரகாஷ்கிரி, சத்திரவாடா ஆலய நிர்வாக குருசாமி ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில், சத்திரவாடா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.