சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவிஜெயந்தி விழா நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் ஜனன உற்சவத்தை முன்னிட்டு, அம்மனுக்கு 17 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.