திருச்செந்தூரில் வைகாசி விசாகம்: நடை திறப்பில் மாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2016 12:05
துாத்துக்குடி:திருச்செந்துார் முருகன் கோயிலில் இன்று நடக்க உள்ள வைகாசி விசாக விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். முருகன் அவதரித்த தினம், வைகாசி விசாக விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக திருச்செந்துார் முருகன் கோயிலில் இன்று (மே 21) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மற்றகால வேளை பூஜைகள் நடக்கும். பிற்பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கும். சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்வார். அங்கு முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்துாருக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.விழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், நிர்வாகிகள் செய்துள்ளனர்.