பதிவு செய்த நாள்
21
மே
2016
12:05
திருப்பதி, :திருப்பதியில் உள்ள, தேவஸ்தான மாதிரி கோவிலில், நவீன வசதிகளை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி, அலிபிரி அருகே உள்ள தேவஸ்தான மாதிரி கோவிலில், திருமலையில் உள்ளது போல், தங்க கருவறையில், ஏழுமலையானை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்படுகிறது. திருமலையில் நடக்கும் அனைத்து சேவைகளும் இங்கும் நடக்கின்றன. காட்டுப்பகுதியில் கோவில் உள்ளதால், பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு நடக்கும் சேவைகள், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, தேவஸ்தான, டிவியில், ஒளிபரப்பப்படுகிறது. கோவிலுக்கு, மேலும், கூடுதல் வசதிகள் செய்ய, தேவஸ்தானம், முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் நேற்று கோவிலை பார்வையிட்டனர். விரைவில், கூடுதல் வசதிகள் செய்யப்படும் என, தெரிகிறது.
பிரமோற்சவம்: திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ரிஷிகேஷ் ஆந்திராசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள, வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன், ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது; மே, 27 வரை நடக்க உள்ளது.